இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு உலக உணவு திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம்

By Jenitha Dec 14, 2022 09:59 AM GMT
Report

இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மூலோபாயத் திட்டம்

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இலங்கையின் மூலோபாயத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு உலக உணவு திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் | World Food Program Endorses Sl Strategic Plan

இது, இலங்கையின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் 2023-2027 க்கான ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு (UNSDCF) ஆகியவற்றுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும்.

மேலும் இத்திட்டமானது, நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு(SGD)2 இற்கிணங்க, 2030 ஆம் ஆண்டளவில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கு எனும் இலக்கை அடைவதற்கேற்ப நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மூலோபாயத் திட்டம் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளான 1, 5, 10 மற்றும் 13 ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கும் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு 17 இற்கமைய தேசிய மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி பதில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் உதவும்.

இதேவேளை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கை அடைவதற்கும் 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அதன் நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை உலக உணவுத் திட்டம் வரவேற்றுள்ளது.

உணவுப் பற்றாக்குறை

உணவுப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய மோசமான நிலையை குறுகிய காலத்தில் குறைப்பதற்காகவும் நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலைமையை முன்னேற்றுவதற்காகவும் இலங்கை முன்னெடுத்துவரும் தேசிய மட்டத்திலான முயற்சிக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது கூட்டத்தொடரின்போதே இலங்கையின் மூலோபாய திட்டத்திற்கு உலக உணவு திட்டம் அங்கீகாரம் அளித்ததாக ரோமிலுள்ள அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் எம். பீஸ்லி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு உலக உணவு திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் | World Food Program Endorses Sl Strategic Plan

அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்காக அரசாங்கம் செய்துள்ள முதலீட்டின் மூலம் கிடைக்கும் பலனை பன்மடங்கு அதிகரிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கைரீதியான ஆலோசனைகளை வழங்க உலக உணவு திட்டம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்திற்கு தன்னார்வ நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்படுகிறது. எனவே, இலங்கையின் மூலோபாய திட்டங்களுக்காக உலக உணவு திட்டத்தினால் வழங்கப்படும் பங்களிப்பானது நன்கொடையாளர்களால் உலக உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி மூலமாகும் என்பது குறிப்பிடதக்கது.    

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US