இலங்கையின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்தாலும், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அதாவது சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை மட்டத்திலும் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக வங்கியின் இலங்கை பிரிவின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் SRI LANKA DEVELOPMENT UPDATE அறிக்கையை வெளியிட்டு டேவிட் சிஸ்லன் இந்தக் கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொழில்துறை மற்றும் சேவைகள்
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளதாகவும், முன்னர் கணிக்கப்பட்ட 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்வதன் மூலம் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சிக்கு தொழில்துறை மற்றும் சேவைகளில், குறிப்பாக கட்டுமானம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகளின் வலுவான செயல்திறன் காரணமாகியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri