உலக வங்கியின் 5 வருட திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்த சுகாதார துறையினர் கௌரவிப்பு(Photos)
உலக வங்கியின் அனுசரணையில் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் நிறைவினை முன்னிட்டு இச்செயற்திட்டத்தில் பங்குகொண்டவர்களையும் ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(16.12.2023) கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
நினைவு சின்னங்கள்
இந்நிகழ்வில் சுகாதார துறையினர் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் அ.லதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்தா, பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam