அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு புதிதாக தெரிவாகிய உறுப்பினர்களுக்கான சபை நடவடிக்கைகள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள், சபை சட்டங்கள், ஒழுங்குவிதிகள், சேவைகள் தொடர்பான செயலமர்வு நடைபெற்றுள்ளது.
இந்த செயலமர்வு சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் மூலம் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர், தேசிய காங்கிரஸ் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா வேண்டுகோளுக்கிணங்க வெற்றிகரமாக இடம்பெற்றது.
அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வு, உறுப்பினர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செயலமர்வு
இந்த செயலமர்வில் வளவாளர்களாக மாற்றத்திற்குரிய சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர்களான இப்திகார் றிஷாத் ஷரீப், எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் கலந்து கொண்டு விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இவர்களின் அனுபவமிக்க வழிகாட்டல் புதிய உறுப்பினர்களுக்கு பெரிதும் உதவியது.
இந்த செயலமர்வு அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கால நடவடிக்கைகளை மேலும் திறம்பட மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



