நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்த கவிந்த ஜயவர்தன
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, நீதித்துறையால் வழங்கப்பட்ட உத்தரவு ஒன்றை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கக்கோரியது ஒரு தீவிரமான விடயம் என்றும், அது நீதித்துறையைத் செல்வாக்கு செலுத்துவதற்குச் சமம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்துக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

"நீதித்துறையால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்பது ஒரு தீவிரமான விடயம். அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படலாம்.
நான் ஒரு சட்டத்தரணி அல்ல, ஆனால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படலாம் என்று நான் உணர்கிறேன்," என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri