இரகசிய தகவலின் அடிப்படையில் வசமாக சிக்கிய நபர்
லிந்துலை - மட்டுக்கலை பகுதியில் மதுபான போத்தல் ஒரு தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (09.07.2025) நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவல்
போயா தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 30 முழு போத்தல்களும், 96 ரா மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
நீதவான் முன் முற்படுத்த நடவடிக்கை
மதுபான போத்தல்களுடன் சந்தேகநபரை நுவரெலியா நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
