ஊழியர்களுக்கு 10 கோடி ரூபாய் சம்பளத்தை செலுத்தும் நிலை! தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ள போதிலும் அங்கு பணியாற்றும் ஆயிரத்து 90 பேருக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்த நேரிட்டுள்ளது.
இதனடிப்படையில், மாதம் ஒன்றுக்கு குறைந்தது 10 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்த செலவாகும் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சம்மேளத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தினமும் 4 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோல் மற்றும் 4 ஆயிரத்து 500 மெற்றி தொன் டீசல் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் வரை நாட்டில் 33 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோலும் சுமார் 13 ஆயிரம் மெற்றி தொன் டீசலும் கையிருப்பதில் இருந்த எனவும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
