மின் கட்டண அதிகரிப்பு: பெரும் நெருக்கடியில் தொழிலாளர்கள் (Video)
மின் கட்டணம் அதிகரிப்பு காரணமாக திருகோணமலை பகுதியில் பல ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பேராறு பகுதியிலுள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தொழிலாளர்கள் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் மின் கட்டணம் மாதாந்தம் 25,000 ரூபாய் வந்தது தற்போது 15 ஆயிரம் வரை உள்ளது.
தோட்டப் பயிர் செய்கை
விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர் நோக்கியதில்லை.
இந்த நிலையில் எமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காலகாலமாக பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்த நாம் மின் கட்டணம் அதிகரிப்பு காரணமாக உளுந்து கச்சான் பயிர்ச்செய்கை கைவிட்டுச் செல்ல வேண்டியே நிலை ஏற்பட்டுள்ளது.
உதவுமாறு கோரிக்கை
மேலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் தோட்டப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலை மாத்திரமே நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் நாம், மாற்றுத் தொழிலை எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் ” என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்..
மேலும், இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
