கடலோர தொடருந்து பாதை புனரமைப்பு குறித்து வெளியான தகவல்
தென்னிலங்கைக்கான கடலோர தொடருந்து மார்க்கத்தில் சுமார் பத்தாயிரம் கொங்கிறீட் சிலிப்பர் கட்டைகளை பொருத்தும் பணிகளை தொடருந்து திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
தற்போதைக்கு தொடருந்து பாதைகளில் சேதமடைந்துள்ள சிலிப்பர் கட்டைகள் அகற்றப்பட்டு குறித்த இடங்களில் இந்தப் புதிய கொங்க்றீட் சிலிப்பர் கட்டைகள் பொருத்தப்படவுள்ளன.
கடந்த காலங்களில் சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்திருந்த நிலை காரணமாக பாணந்துறை தொடக்கம் கொழும்பு கோட்டை வரை வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
வேகக் கட்டுப்பாட்டுப் பிரச்சினை
இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பருக்குள்ளாக கடலோர தொடருந்து பாதையின் வேகக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகளில் 70வீதம் தீர்க்கப்பட்டு விடும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக கடலோர தொடருந்து பாதைகளின் பாலங்களும் தற்போதைக்கு புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri