கொழும்பில் பணத்துக்காக விற்பனை செய்யப்படும் பெண்கள்: பலர் கைது
கொழும்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் இரண்டு ஸ்பா நிலையங்களை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது ஸ்பா நிலையங்களில் இரண்டு முகாமையாளர்களுடன் 8 பெண்களை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி, தமன, நிவித்திகல மற்றும் நாவலப்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் சுற்றிவளைப்பு
ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் மஹரகம வட்டேகெதர மற்றும் பன்னிபிட்டிய, தெபானம பிரதேசத்தில் உள்ள இரண்டு ஸ்பா மையங்கள் மூலம் பெண்களை பணத்துக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுகேகொட நீதிமன்றில் தேடுதல் உத்தரவு பெற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam