பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்கள்! வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
ஆண்டின் கடந்த 9 மாதங்களில் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுடன் 47 குழந்தைகள் சிறையில் இருப்பதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்த குழந்தைகளில் 20 சிறுவர்களும் 27 சிறுமிகளும் அடங்குவதாகவும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் கடந்த (27) திகதி வரையிலான 9 மாதங்களில், 1483 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பெண்களில், 229 பேர் தண்டனைக்குள்ளான கைதிகளாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையிலான 7 மாதங்களில், போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 184 ஆகும். அவர்களில், 75 பேர் ஐஸ், 97 பேர் ஹெரோயின், 8 பேர் கஞ்சா, ஒரு பெண் ஹபின் மற்றும், 3 பேர் பிற போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெண்களின் எண்ணிக்கை
கடந்த ஆண்டு பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 885, அவர்களில் 369 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் 138 பேர் ஐஸ் , 199 பேர் ஹெரோயின், 17 பேர் கஞ்சா, 14 பேர் பிற போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு, 655 திருமணமான பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர், அதில் 278 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், கடந்த ஆண்டு 98 திருமணமாகாத பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அதில் 65 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவாகும்.
ஆனால், கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அரசாங்கம் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு நாளைக்கு சாராசரியாக ரூ. 1,411 மற்றும் ஒவ்வொரு கைதிக்கும் ஆண்டுக்கு ரூ. 516,352 செலவிடுவதாக தெரியவருகிறது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri