கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - தப்பியோடிய சந்தேகநபருக்கு நேர்ந்த கதி
அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்த நபர் விஷம் அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் காட்டு யானையுடன் மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் கொலை
இன்று அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 45 வயதான கயனி இரோமா திசாநாயக்க என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மகள் பாடசாலைக்கு செல்வதற்காக உணவு தயாரிப்பதற்காக இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டின் சமையலறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், வீட்டின் பின்புறம் மறைந்திருந்த சந்தேகநபர் மன்னா, பெண்ணின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியமையால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் விஷம் அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் மஹஇலுப்பள்ளம நோக்கிப் பயணித்துள்ளார்.
இந்த நிலையில், மஹஇலுப்பள்ளம பலநோக்குக் கட்டிடத்திற்கு அருகில் அவரது மோட்டார் சைக்கிள் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டு யானையுடன் மோதிய சந்தேக நபர்
சந்தேகநபர் எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மஹஇலுப்பள்ளம, கலாகரம்பேவ பிரதேசத்தில் தங்க நகைகளை அடகு பிடிக்கும் வர்த்தகர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள கால்வாயொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பணத் தகராறு அல்லது தகாத உறவு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 21 மணி நேரம் முன்
அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்
அரசியல் முகாம்களாக பிளவுபட்டுள்ள தென்னிலங்கை அரசியல்! பிரபல தொழிலதிபர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி News Lankasri