இலங்கை பெண்களுக்கு சாதகமாக அமைந்துள்ள முக்கிய தீர்ப்பு
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.
இதனை சட்டமா அதிபர் இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் நீக்கம்
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து இரு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையான அரசு வழக்கறிஞர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த தீர்ப்பு இலங்கை தொழில் சந்தையில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. இது பொதுத்துறையில் மிகவும் முக்கியமானது.
இதுவரை, ஓட்டுநர், நிலைய அதிபர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி போன்ற சில முக்கிய பதவிகளை பெண்கள் வகிக்க அனுமதிக்கப்படவில்லை.
பாரம்பரியமாக ஆண்களுக்கு மட்டுமே இருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri