கோர விபத்தில் யுவதி பலி - தந்தை படுகாயம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்துள்ளார்.
கல்னேவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, தந்தை மற்றும் மகள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மகள் உயிரிழந்ததாகவும், தந்தை படுகாயமடைந்ததாகவும் அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி பலி
அனுராதபுரம், பந்துலகமவில் உள்ள அரசு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்து வந்த எப்பாவல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சந்தரேகா சுபோதனி ஹேமந்தா என்ற யுவதியே உயிரிழந்தார்.
தந்தையுடன் ஒரு பாடநெறியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான யுவதி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் 35 வயதுடைய பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 11 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
