யாழில் ஆடையற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
யாழில் (Jaffna) வயோதிப பெண்ணொருவரின் சடலம் ஆடையற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நேற்றைய தினம் (9.4.2024) யாழ்ப்பாணம் (Jaffna) - மானிப்பாய் (Manipay) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.
63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
குறித்த பெண், பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்ட நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
