அரசாங்கம் நாட்டு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
அந்தவகையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஏற்படும் விபத்துகள் குறித்து மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள்
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களில் 100% பேர் இன்னும் குணமடையவில்லை என சஜித் ரணதுங்க தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் நெடுஞ்சாலைகளில் இடம்பெறுவதாகவும் விசேட சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
