குழந்தையை பிரசவித்து குப்பை மேட்டில் வீசிய இளம் தாய்
அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவர் தனது வீட்டில் குழந்தையை பிரசவித்து குப்பையில் வீசியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிராலோகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண் எனவும், அவர் கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் 02 மணி முதல் 03 மணி வரையில் காலப்பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்து குழந்தையை குப்பை மேட்டில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரின் தாயும் குழந்தையும் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த குற்றச் செயல் தொடர்பில் சந்தேகநபரின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம தலைமையக பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
