மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை முற்றுகையிட்டுள்ள பெண்கள்
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மந்தமான செயற்பாட்டை கண்டித்தும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்துக்கான நிதி விடுவிக்கப்படாமையினை கண்டித்து மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை பெண்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜீவபுரம் , சாந்திபுரம் ஜிம்றோன் நகர் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இவ்வாறு முற்றுகையிட்டு இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த கிராமங்களில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிதி சுமார் மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையிலும், இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் பழைய வீடுகளும் இன்றி புதிய வீட்டு திட்ட பணிகளும் பூர்த்தியடையாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடும் மழை மற்றும் வெள்ளப் பாதிப்புக்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருவதாகவும், வீடு அமைப்பதற்கு என பெறப்பட்ட கடனைக் கூட திரும்ப செலுத்த முடியாத நிலையில், கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்து வீட்டுத்திட்ட பயனாளிகளான பெண்கள் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சென்று முற்றுகையிட்டு போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விட்டுத்திட்டங்களுக்கான 2 ஆம்,3 ஆம் கட்டங்களுக்கான நிதியே விடுவிக்கப்படாத நிலையில், இந்த அரசாங்கம் புதிய வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாங்களும் இந்த நாட்டின் குடி மக்கள் என்பதை உணர்ந்து முழுமையடையாத வீட்டுத்திட்டங்களுக்கான நிதியையும் முடிவுறுத்திய வீட்டு திட்டங்களுக்கான மிகுதி பணத்தினையும் விரைவில் விடுவித்துத் தறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.











தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
