கிழக்கு மாகாணத்திலிருந்து நுவரெலியாவுக்கு விஜயம் செய்த பெண்கள் செயலணியினர்
கிழக்கு மாகாணத்திலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்கள் செயலணியினர், நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலை (Trincomalee) மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் மற்றும் பாம் பௌண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த கற்றல் அனுபவப் பகிர்வு கள விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தன.
திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையிலான பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்கள் அணியினரை நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் வைத்து வரவேற்றார்.
மலையக தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம்
மேலும், குழுவினர், மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்களை நேரில் சென்றும் பார்வையிட்டனர்.
இந்தக் கற்றல் கள விஜயத்தின்போது, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார், வீ எபெக்ற் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன் மற்றும் திட்ட முகாமையாளர் ஆர். றிசாந்தி உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |