பொலிஸ் திணைக்களத்தில் பெண்ணொருவருக்கு கிடைக்க போகும் உயர் பதவி
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டம் மற்றும் நீதித்துறையில் பிரதான பதவிகளை வகித்த பெண்
சிவில் பெண்ணொருவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அவர் இலங்கை சட்டம் மற்றும் நீதித்துறையில் பிரதான பதவிகளை வகித்த சிரேஷ்ட பெண் அதிகாரி எனவும் கூறப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு கடும் போட்டி
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், வெற்றிடமாகும் இடத்தை பிடிக்க பொலிஸ் திணைக்களத்திற்குள் பெரும் போட்டி உருவாகியுள்ளது.
இந்த நிலைமையை சமன் செய்யும் வகையிலும் பொலிஸ் திணைக்களத்தை மறுசீரமைக்கும் நோக்கிலும் சிவில் அதிகாரியை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையின் அடுத்த பொலிஸ் மா அதிபராக பெண்ணொருவர் நியமிக்கப்படலாம் என பொலிஸ் மா அதிபரும் அண்மையில் சூசகமான தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 53 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
