இலங்கையில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா பயணி: வலுக்கும் எதிர்ப்பு
காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டும் போது சந்தேகநபர்கள் அனைவரும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணம்
காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார்.
அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனம்
சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய
ஒன்றியம் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
