யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை(Photos)
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
கோவிட் தொற்று

இலங்கையில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாவிடில் இறப்புக்கள் அதிகம் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்றுதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் வழங்குமாறும் பிரதேச செயலாளர்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் கலந்துரையாடல்

மேலும், இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன், யாழ்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், சமுதாய வைத்திய நிபுணர்
சு.சிவகணேஷ் மற்றும் பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
    
    
    
    
    
    
    
    
    
    உலக கோப்பை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. தளபதி விஜய் முதல் சமந்தா வரை பிரபலங்கள் வாழ்த்து மழை Cineulagam
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam