போதைப்பொருள் பாவனையால் யாழ். பிரபல பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவர்கள்! மருத்துவ அதிகாரி பிரணவன்
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படுகின்ற பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது என்று யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.
மறைக்கப்படும் தகவல்கள்
எனினும், ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலைகளில் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதால் அது குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது மறைக்கின்றனர்.
இந்தச் செயல் கொலைக்குச் சமனானது. இனி இந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். ஏனெனில் நிலைமை மோசமாகிவிட்டது.
யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.
பரிசோதனையின்போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு
அடிமையாகியிருந்தனர்.
பின்னர் பாடசாலையின் நற்பெயரைக் கருத்தில்கொண்டு சில விடயங்கள்
மூடிமறைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலைமை கவலையளிக்கின்றது என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan
