தாய்லாந்தில் பௌத்த பிக்குகளிடம் நெருங்கி பழகி கப்பம் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
தாய்லாந்தில் பெண் ஒருவர் பௌத்த பிக்குகளுடன் நெருங்கிய உறவு கொண்டு அவர்களிடமிருந்து கப்பம் பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"மிஸ் கோல்ஃப்" என அழைக்கப்படும் குறித்த பெண், குறைந்தது ஒன்பது பிக்குகளுடன் நெருங்கிய உறவு பேணியதாகவும், அது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி அவர்களிடம் பணம் பறித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பௌத்த மதத் துறை
தாய்லாந்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தப் பெண் சுமார் 385 மில்லியன் பாட் (அமெரிக்க டொலராக ரூ. 11.9 மில்லியன்) அளவிற்கு பிக்குகளிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் சோதனையின் போது, மிஸ் கோல்ஃபின் வீட்டில் 80,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கைப்பற்றப்பட்டன. அவை, பிக்குகளை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம், தாய்லாந்தின் பௌத்த மதத் துறையை கடந்த சில ஆண்டுகளில் உலுக்கிய முக்கிய சர்ச்சைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இதற்கு முன்னரும் பௌத்த பிக்குகள் மீது பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சூதாட்டங்களில் ஈடுபட்டதாக
2024 மே மாதத்தில், பாங்காக் நகரில் உள்ள ஒரு பிக்குவுடன் மிஸ்ஸ் கோல்ஃப் நெருங்கிய உறவு வைத்ததாகவும், பின்னர் குழந்தை பெற்றதாகக் கூறி ஏழு மில்லியன் பாட் பணத்தை கோரியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தெரிய வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விரிவான விசாரணைகளை தொடங்கியதாகவும், அந்த விசாரணைகளில், இதே முறையில் பல பிக்குகள் மிஸ்ஸ் கோல்ஃபிடம் பணம் வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அந்தப் பணத்தைக் கொண்டு குறித்த பெண் சூதாட்டங்களில் ஈடுபட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தற்போது, மிஸ் கோல்ஃப் மீது மிரட்டல், பணச் சலவை மற்றும் திருடப்பட்ட சொத்துகளைப் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிக்குகள் தொடர்பான ஒழுக்க மீறல் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்ய, புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை தாய்லாந்து காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த சர்ச்சையை அடுத்து, தாய்லாந்து பௌத்த சங்க உச்ச சபை (Sangha Supreme Council), பிக்குகளின் ஒழுக்க விதிகளை மீளாய்வு செய்ய விசேட குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri