பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை
இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை, மேவன பலான பகுதியைச் சேர்ந்த பிரதீபிகா குமாரி என்ற 42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் அடையாளம்
இது தொடர்பான விசாரணைகளை பாணந்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
படத்தில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார்னு தெரியுதா? இளம்வயதில் எப்படி இருந்திருக்கார்னு பாருங்க Manithan