கிளப் வசந்த படுகொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்
கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட இருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த கொலையுடன் தொடர்புடைய மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் வெளியான தகவல்
தெஹிவளை கௌடான பிரதேசத்தில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கிளப் வசந்தவைக் கொல்ல வந்த துப்பாக்கிச் சூடு நடத்திய சண்டி என்ற அஜித் ரோஹனவும் அடங்குவதாகவும், அவர் முன்னாள் இராணுவ வீரராக14வது லயன் படைப்பிரிவில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கிளப் வசந்த கொல்லப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கேபிஐ என அடையாளம் காணப்பட்ட தோட்டாக்கள் போன்றே சந்தேகநபர்களிடம் இருந்து 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொலைச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியிருந்தனர்.
கொலைக்கான பின்னணி
இவ்வாறானதொரு பின்னணியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன தலைமையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 165, டி56 தோட்டாக்கள், 77, 9 மிமீ தோட்டாக்கள், 17 வகையான தோட்டாக்கள், 38 புள்ளி 8 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
T-56 துப்பாக்கி, ஒரு துப்பாக்கி, 1 பிஸ்டல் மகசீன், 9MM தோட்டாக்கள் மகசீன், 1 கைவிலங்கு, 2 சினோட் கேப்சூல்கள் மற்றும் 03 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
