நுவரெலியாவில் கொடூரம் - விடுதியில் தங்கியிருந்த பெண் சடலமாக மீட்பு : தீவிர விசாரணையில் பொலிஸார்
நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து நேற்று(17.06.2026) மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்த அடிப்படையிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னர்
தனது காதலனுடன் நுவரெலியாவிற்கு அண்மையில் வருகைத்தந்து தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் திடீரென்று நேற்றுமுன்தினம்(16) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த விடுதியிலிருந்து10:30 மணியளவில் தங்கியிருந்த அறையில் இருந்து தூக்கிச் சென்று காரொன்றில் ஏற்றி செல்லும் செயல்களைச் விடுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வெலிகம பகுதியை சேர்ந்த பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி (மருத்துவர், 33 வயது) மற்றும் கன்னொருவ பகுதியை சேர்ந்த அவரது காதலரான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க (35 வயது) என்பவரும் நுவரெலியாவிற்கு கடந்த 03ஆம் திகதி முதல் குறித்த தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
அதன் பின்னர் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்து தங்கியிருந்த தனியார் விடுதியிலிந்து மீட்டு காரில் ஏற்றிச் சென்று கண்டி - தெல்தெனிய பகுதியில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
எனினும் குறித்த பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்கு வருகைத்தந்த ஆண் சந்தேக நபர் இதுவரை கைது செய்யவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நுவரெலியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியில் சம்பவ இடத்திலுள்ள தடயங்கள், சிசிடிவி (CCTV) காட்சிகள் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் பெற்று தொலைபேசி அழைப்புத் தரவுகளை சேகரித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 15 மணி நேரம் முன்
மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam