ட்ரம்ப் ஆட்சியின் எதிரொலி : அமெரிக்க தடுப்பு மையங்களில் கொத்துக் கொத்தாக மரணிக்கும் அகதிகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 ஜனவரியில் தனது தீவிரமான அகதிகள் வெளியேற்றப் பிரசாரத்தைத் தொடங்கியதில் இருந்து, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமுலாக்கப் பிரிவின் (ICE) தடுப்பு மையங்களில் உள்ள கைதிகளின் மரண விகிதம் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
கடந்த 2009 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், சராசரியாக 3,848 கைதிகளுக்கு ஒரு மரணம் என்ற அளவில் இருந்த விகிதம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு 1,630 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் மிக மோசமாக அதிகரித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தடுப்பு மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 70,000 ஆக உயர்ந்த நிலையில், ஜூன் மாத தொடக்க நிலவரப்படி சுமார் 50 பேர் இந்த முகாம்களில் உயிரிழந்துள்ளனர்.
மரணங்கள்
இந்த மரணங்கள் குறித்து ஆய்வுசெய்த மருத்துவ வல்லுநர்கள், முகாம்களில் வழங்கப்படும் மருத்துவக் கவனிப்பு மற்றும் கண்காணிப்பு மிகவும் மோசமாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 21 பேர் சுயநினைவற்ற நிலையிலோ அல்லது இறந்த பின்னரோதான் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளனர்.
எனினும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், அகதிகள் முகாம்களில் பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான சூழலை உறுதிசெய்வதாகவும், வந்திறங்கும் தருணத்தில் இருந்தே முறையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam