தமிழர் பகுதியில் மர்மமான முறையில் இறந்த பெண்!
வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37 வயது மதிக்கத்தக்க பெண் மீது இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்கள்
இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளதாகவும் கொலை இடம்பெற்ற போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையாளியினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொலை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன் அம்பாறை தடயவியல் பொலிஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
