அம்பாறையில் அரிசி பதுக்கல் தொடர்பில் சுற்றிவளைப்பு
அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நேற்றையதினம்(23.01.2025) பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாண்டிருப்பு மருதமுனை பெரிய நீலாவணை பகுதியில் உள்ள அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி வர்த்தக நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களிடம் கோரிக்கை
மேலும், பல அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரிசி பதுக்கலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தொடர்பில் அறியத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
தனது திருமண புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஜுலி... புகைப்படங்கள் இதோ Cineulagam