கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் உயிரிழந்த 47 வயதுடைய பெண்ணுக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளிற்காக மாதிரிகள் அனுப்பி
வைக்கப்பட்ட நிலையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை
தகவல்கள் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருவதுடன், உயிரிழந்தவரின் சடலம்
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.