இளம் மனைவியை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவன்

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Police Investigation
By Steephen Jun 26, 2022 09:50 AM GMT
Report

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், கணவரால் கோடாரியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(25) இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோடாரியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் இன்று(26) அதிகாலை நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தாக நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவின் ஒலிப்பெண்ட் தோட்டத்தின் மேற்பிரிவில் வசித்து வந்த சுப்ரமணியம் சத்தியவாணி என்ற 24 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் 

இளம் மனைவியை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவன் | Woman Killed Husband Surrender

சம்பவம் தொடர்பாக மேலும் தொரியவருவதாவது, உயிரிழந்த இளம் பெண்ணின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்து வருவதுடன் பகுதி நேர வருமானத்திற்கு நுவரெலியா நகரில் முச்சக்கரவண்டி சாரதியாகவும் பணியாற்றி வருகின்றார்.

சம்பவ தினமான நேற்று (25) இரவு தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பிய கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததுடன், கணவன் தனது இளய மகளைத் தூக்கிக் கொண்டு இரவோடு இரவாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

விசாரணை 

உயிரிழந்த பெண்ணுக்கு 7 மற்றும் 3 வயது மகள்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சரணடைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு இன்று (26) காலை நுவரெலியா மாவட்ட நீதவான் விஜயம் செய்து மரண விசாரணை நடத்தியுள்ளார்.

நீதவானின் உத்தரவுக்கு அமைய, சடலம் சட்டவைத்தியர் ஒருவரின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக தகவல்-திருமலை

11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US