கால்பந்தாட்ட வீரரை மிரட்டி பணம் பறித்த பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
தென் கொரிய நீதிமன்றம் ஒன்று, கால்பந்து நட்சத்திரம் Son Heung-min's (Luịn rnarabe-in) ஆல் தாம் கர்ப்பமாக இருப்பதாக பொய்யாகக் கூறி மிரட்டியதற்காக, பெண் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் இந்த விடயத்தை ஊக்குவித்த அவரின் நண்பரான 40 வயதுடைய ஆண் ஒருவருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிரட்டி பணம் பறித்த பெண்
சியோல் மாவட்ட நீதிமன்ற தகவல்படி, 20 வயதுடைய அந்தப் பெண், பொய் குற்றச்சாட்டை சுமத்தியதுடன், பணம் கொடுக்காவிட்டால் பகிரங்கமாகப் பேசப்போவதாக மிரட்டியதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்தநிலையில் குறித்த பெண், கால்பந்தாட்ட வீரரை மிரட்டி, பணத்தை பெற்றதாகவும், அதனைக் கொண்டு, ஆடம்பரப் பொருட்களை கொள்வனவு செய்ததாகவும் மன்றின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆசியாவின் மிக முக்கியமான கால்பந்து வீரர்களில் ஒருவரான சன், ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஒகஸ்ட் மாதம் டோட்டன்ஹாமை விட்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கால்பந்து கழகத்தில்; சேர்ந்துக்கொண்டார்.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri