டித்வா சூறாவளியின் கொடூரம்! அதிர்ச்சியளிக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கை..
25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால் ஏற்பட்ட வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை பாதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஐ.நா. அறிக்கை
இதன்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 'டித்வா' சூறாவளி காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri