அமெரிக்காவின் C-130 விமானத்தில் இலங்கைக்குள் நுழைந்த 60 விசேட இராணுவம்!
டித்வா புயல் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக இலங்கை்கு அமெரிக்க விமானங்கள் வந்திறங்கியுள்ளன.
அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் நேற்றையதினம்(7) கட்டுநாயக்க விமானத்தளத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில்,அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று(8) தரையிறங்கியுள்ளது.
இலங்கை தற்போது யார் உதவிகரம் நீட்டினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ்,தெரிவித்தார்.
எல்லா நாடுகளும் தங்களை நிலைநிறுத்துவதற்கான போட்டிகளமாக இது மாறியுள்ளது என்றார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...