அம்பாறையில் சூட்சுமமான முறையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த புதன்கிழமை (7) நகை திருடப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சம்பவ தினத்தன்று முறைப்பாடு செய்திருந்தார்.
மேலதிக தகவல்கள்
இந்நிலையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலுக்கமைய பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சம்மாந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று (11) இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணை திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்தனர்.
மேலும், சந்தேக நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிஸார் பொதுமக்களின் கேட்டுள்ளனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
