தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பரிசீலிக்க தயாராகும் தமிழர் தரப்பு!
தமிழ் மக்களின் 80 ஆண்டுகால கோரிக்கைக்கு தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர் எவரேனும் சரியான முறையில் தீர்வு வழங்க முன்வந்தால் அது தொடர்பில் பரிசீலிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் பொதுவேட்பாளர்
தமிழ் பொதுவேட்பாளராக பெயர் முன்மொழியப்பட்டுள்ள அரியநேந்திரன் மீது எந்தவித இடைக்கால தடைகளையும் விதிக்கவில்லை.
அவரிடம் விளக்கம் கோருவது அந்த கட்சியின் மரபாகும். தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் எந்தவித எதிர் மனப்பாங்கையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.
ஆனால் கட்சியில் ஒரு சிலருடைய எதிர் கருத்துக்கள் காணப்படுகிறது. ஆனால் பொதுவேட்பாளர் விடயத்திற்கு ஆதரவளிப்பதே எனது நிலைப்பாடு ." என சிறீதரன் விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
