சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! விசேட பாதுகாப்பு நடைமுறை
எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் தினம்
15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினம் என்ற காரணத்தினால் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் இணைத்து சுமார் 1500 பேரை பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
வாக்குச் சின்னத்தை அறிவிக்காத வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைத் தவிர எஞ்சிய சின்னங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
