ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்
வவுனியா ஏ9 வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் இருந்து ஏ9 பிரதான வீதியூடாக பயணித்த கார் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு அலுவலகத்திற்கு எதிராகவுள்ள வீதிக்கு திரும்ப முற்பட்ட போது குறித்த வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் வவுனியா நகரிற்கு திரும்ப முற்பட்ட போது இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.








மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
