கனடாவில் வைத்தியசாலை கதவு மூடப்பட்டதால் வாசலிலே குழந்தை பிரசவித்த பெண்
கனடாவில் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டிருந்த காரணத்தினால் பெண் ஒருவர் வாசலிலேயே குழந்தை பிரசவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைத்தியசாலையின் வெளியே சத்தம் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்த போது தாயும் சேயும் இருப்பதனைக் கண்டதாக பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி நீக்கம்
வைத்தியசாலையின் பிரதான நுழைவாயல் கதவு இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும் எனவும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வேறு நுழைவாயில் கதவு உண்டு எனவும் வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தெரியாத பெண் பிரசவ வலியில் பிரதான நுழைவாயில் கதவிற்கு அருகாமைக்கு சென்று அங்கேயே குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி நீக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாயினதும் சேயினதும் உடல் ஆரோக்கியம் பற்றிய விபரங்களை வைத்தியசாலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |