யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி - பெண் கைது
கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இரண்டு சரீர பிணை
நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை இளைஞனிடம் குறித்த பெண் மீள் அளித்தார்.
அதனை அடுத்து பெண்ணை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
