வெடுக்குநாறிமலை நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்: அம்பலப்படுத்திய சிறீதரன்

Sri Lankan Tamils Parliament of Sri Lanka S. Sritharan
By Thulsi Mar 21, 2024 02:23 PM GMT
Report

வெடுக்குநாறிமலை கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த வவுனியா நீதிமன்ற நீதவானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

குறித்த அச்சுறுத்தலானது வடக்கு எமது உரிமை என்ற சிங்கள முக நூல் (பேஸ்புக்) ஒன்றின் மூலமாக விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து நேற்று(20) நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன் கடும் வாதமொன்றை முன்வைத்திருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முடியாமல் வீடு திரும்பிய 100 இலங்கையர்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முடியாமல் வீடு திரும்பிய 100 இலங்கையர்கள்

சிங்கள முக நூல் செய்தி

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரிதின நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்ற நீதியரசரால் விடுதலை செய்யப்பட்டனர்.


பின்னர் ''வடக்கு எமது உரிமை ''எனவும் பெயரில் உள்ள சிங்கள முக நூல் பக்கத்தில் இந்த 8 பேரையும் விடுதலை செய்த நீதியரசரின் பெயரைக் குறிப்பிட்டு விரைவில் அவர் குருந்தூர் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியவர் நாட்டை விட்டு தப்பியோடியது போன்று தப்பியோடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட சிங்கள பேரினவாதத்தால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் இந்த சிங்கள முக நூல் செய்தி மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுகின்றது.

இந்த நாட்டில் அடிக்கடி நல்லிணக்கம் பற்றி பேசுகின்றவர்கள் வெடுக்குநாறிமலையில் நடந்த பொலிஸ் அராஜகம் பற்றி கருத்தில் கொள்ளுங்கள் .

தான் விரும்பும் மதத்தை வணங்கமுடியாத நாட்டில் எப்படி உங்களினால் நல்லிணக்கம்பற்றி வாய் கிழிய கத்த முடியும்? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருப்பதல்ல.

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை - சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை - சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு

பிரச்சினைக்கு முழுமையான காரணம்

ஓர் இன மக்களை அனுசரித்தது நடப்பதில்தான் அது உள்ளது.எனவே வெடுக்குநாறிமலையில் இந்து மக்கள் வழிபட எந்த தடையும் இனிமேல் இருக்கக்கூடாது.

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்: அம்பலப்படுத்திய சிறீதரன் | Sritharan Mp Vedukkunaari Malai Issue Parliament

இந்தப்பிரச்சினைக்கு முழுமையான காரணம் தொல்பொருள்துறைக்கு அமைச்சராக இருக்கின்ற விதுர விக்கிரமநாயக்கதான்.

அவர் ஒரு நேர்மையாக, கள்ளம் கபடமற்று இதயசுத்தியோடு செயற்படுவாரேயானால், இனங்களை மதித்து செயற்படுவாரேயானால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்க நியாயமில்லை .

வெடுக்குநாறிமலையில் தொல்லியல் திணைக்களமும் பொலிஸாரும் அராஜகமாக நடந்து கொண்ட முறை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் நான் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன் என்றார். 

அமைச்சரின் மனைவிக்கு நீதிமன்றம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அமைச்சரின் மனைவிக்கு நீதிமன்றம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US