இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்
டில்ஷான் மதுஷங்க காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றையதினம் (20.03.2024) டில்ஷான் மதுஷங்கவிற்கு மாற்று வீரராக தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவெனா மபாகாவை அறிவித்ததையடுத்தே குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
ரசிகர்கள் கவலை
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.6 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
இந்நிலையில், உபாதை காரணமாக அவர் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 24ஆம் திகதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
