ஐபிஎல் போட்டிகளின் முறியடிக்க முடியாத சாதனைகள்
17ஆவது ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் கிரிக்கெட் தருணங்களை உள்ளடக்கிய இந்த ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பல முறியடிக்க முடியாத சாதனைகள் பதிவாகியுள்ளன.
அவ்வாறான சில சாதனைகள்,
1. விராட் கோஹ்லி - 973 ஓட்டங்கள்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் விராட் கோஹ்லி 973 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார்.
ஏறத்தாழ ஒரு தொடரில் 1,000 ஓட்டங்களை குவித்த விராட் கோஹ்லியின் சாதனை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது.
2. அதிகூடிய தனிநபர் ஓட்டம்
புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 175 ஓட்டங்களை பெற்றார்.
இதுவே இதுவரை ஐபிஎல் போட்டி ஒன்றில் தனிநபர் ஒருவர் பெற்ற ஆகக்கூடிய ஓட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள்
2011இல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கெதிரான நடைபெற்ற போட்டியில் பிரசாந்த் பரமேஸ்வரன் வீசிய ஓவரில் கெய்ல் 37 ஓட்டங்களை பெற்றார்.
4 ஆறு ஓட்டங்கள், 3 நான்கு ஓட்டங்கள் மற்றும் 1 முறையற்ற பந்து உள்ளடங்கலாகவே குறித்த ஓவரில் 37 ஓட்டங்கள் பெறப்பட்டது.
அதேவேளை, 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா பெங்களுருக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை சமன் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4. அமித் மிஸ்ரா - ஹட்-ட்ரிக் விக்கெட்டுக்கள்
ஐபிஎல் தொடர்களில் அதிகளவாக ஹட்-ட்ரிக் விக்கெட்டுக்களை எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் அமித் மிஸ்ரா படைத்துள்ளார்.
2008, 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களிலேயே அமித் மிஸ்ரா ஹட்-ட்ரிக் விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |