கொழும்பில் பணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
கொழும்பு, சேதவத்தை, பாலத்திற்கு அருகில் களனி கங்கையில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
55 வயதுடைய பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர் என சந்தேகிப்பதாக கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலத்தில் எவ்வித காயங்களும் இல்லை. அந்த பெண் அணிந்திருந்த ஆடையில் 1200 ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் களனி கங்கையில் மிதந்து வந்துள்ளது. பின்னர் நேற்று சேதத்தை களு பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri