தீக்காயங்களுக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குப்பையை எரிப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் வடக்கை சேர்ந்த சுஜீபன் தர்சிகா என்ற 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்வித் திணைக்களத்தின் பணியாளரான குறித்த பெண், கடந்த 20ஆம் திகதி வீட்டில் குப்பைக்கு தீ மூட்டியுள்ளார். இதன்போது எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் மண்ணெண்ணையை ஊற்ற முயன்றுள்ளார்.
இதன்போது அணிந்திருந்த ஆடையிலும் மண்ணெண்ணெய் சிந்தியமையால் ஆடைத் தீப்பற்றியுள்ளது.
இதனை அவதானித்தவர்கள் விரைந்து தீயை அணைத்ததுடன் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் நான்கு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.