இருமடங்கு தேசிய சொத்துகளை அழித்த ஜே.வி.பி - எல்.டி.டி.ஈ அமைப்பு! நாமல் பகிரங்க குற்றச்சாட்டு

Namal Rajapaksa Janatha Vimukthi Peramuna National People's Power - NPP NPP Government
By Rakesh Jun 15, 2026 01:49 PM GMT
Report

இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த காலங்களில் திட்டமிட்டு அழித்துள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று(14) மாலை அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் சாலே! பேச்சுத்திறனை இழக்கும் அபாயம்..

உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் சாலே! பேச்சுத்திறனை இழக்கும் அபாயம்..

ஈஸ்டர் தாக்குதல்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்களே இன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசின் மீது வீண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இருமடங்கு தேசிய சொத்துகளை அழித்த ஜே.வி.பி - எல்.டி.டி.ஈ அமைப்பு! நாமல் பகிரங்க குற்றச்சாட்டு | Nama Jvp Ltte Destroyed Assets Beyond Debt

தற்போதைய அரசின் அமைச்சர்கள் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறித் தங்களது நிர்வாக இயலாமையை மறைக்க முயல்கின்றனர்.

அத்தோடு, இந்தக் கோரத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றில் உதவிய சட்டத்தரணிகள் மற்றும் கடந்த காலத்தில் இது தொடர்பான விசாரணைக் கோப்புகளை மூடிமறைத்தவர்களுக்கே இந்த அரசு இன்று அரச கட்டமைப்புக்குள் உயர் பதவிகளை வழங்கி கௌரவித்துள்ளது.

அரசு தான் வழங்கிய பொய் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் அம்பலமாவதைத் தடுப்பதற்காக, தங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மக்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளுவதற்குத் தற்போது தயாராகி வருகின்றது.

உலகக் கோப்பையில் மீண்டும் கவனம் ஈர்த்த ஜப்பான் ரசிகர்கள்! போட்டிக்கு பின்னர் செய்த செயல்

உலகக் கோப்பையில் மீண்டும் கவனம் ஈர்த்த ஜப்பான் ரசிகர்கள்! போட்டிக்கு பின்னர் செய்த செயல்

அவல நிலை

நாட்டின் தற்போதைய விவசாய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பெரும்போகத்துக்கான உரத்தை விவசாயிகளுக்கு முறையாக வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, தங்களுக்கு நெருக்கமான ஒருசில பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்காக வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து இந்த அரசு மடிவளர்க்கின்றது.

இதனால் நெல், காய்கறி, பழங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளும், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் கடுமையான கடன் சுமையில் சிக்கித் தங்களது வியாபாரங்களை முழுமையாக மூடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இருமடங்கு தேசிய சொத்துகளை அழித்த ஜே.வி.பி - எல்.டி.டி.ஈ அமைப்பு! நாமல் பகிரங்க குற்றச்சாட்டு | Nama Jvp Ltte Destroyed Assets Beyond Debt

அதேபோல், நாட்டை கட்டியெழுப்பப் புதிய நிதியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்பட்டாலும், நாடாளுமன்றக் குழுக்களில் அவ்வாறான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அரசாங்கக் கணக்குகளில் உள்ள பொதுமக்களின் பணம் தவறான கணக்குகளுக்குச் செல்வதாகவும் தெரியவருகின்றது. சாதாரண மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் வரிகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பும் அதிகாரிகள், அரசுடன் தொடர்புடைய பெரும் வர்த்தகர்களின் கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் முறைகேடாகச் செல்லும்போது மௌனம் காக்கின்றனர்.

வெளிச்சத்திற்கு வந்த 5 கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்..! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

வெளிச்சத்திற்கு வந்த 5 கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்..! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

பட்டதாரிகளுக்கு வேலை 

அதிகப்படியான வரிச்சுமையால் கிராமப்புறக் கடைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசால், தனியார் துறையில்கூட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

கிராம மட்டத்திலிருந்து மத வழிபாட்டுத் தலங்களையும் எல்லைக் கிராமங்களையும் பாதுகாத்த சிவில் பாதுகாப்புப் படை இளைஞர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காகக் கொழும்புக்குக் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இருமடங்கு தேசிய சொத்துகளை அழித்த ஜே.வி.பி - எல்.டி.டி.ஈ அமைப்பு! நாமல் பகிரங்க குற்றச்சாட்டு | Nama Jvp Ltte Destroyed Assets Beyond Debt

அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டு கொழும்பு போன்ற பெருநகரங்களில் வாழவும் முடியாமல், கிராமத்திலுள்ள தங்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பவும் முடியாமல் அந்த இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மற்றும் சாமானிய மக்களுக்காகப் பேசுவதாகக் கூறி ஏழை மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று சாதாரண மக்களின் துயரங்களை ஏறிட்டும் பாராது, பெரும் வர்த்தகர்களின் முதலாளித்துவ வர்க்கத்தைப் பாதுகாக்கும் ஒரு மினுமினுப்பான ஆட்சியாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US