யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் பலி
யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம்- நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பித்தப்பை சத்திர சிகிச்சை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கு பித்தப்பை கல் சந்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த 22ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
பின்னர் 23ஆம் திகதி பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த பெண் சிலமணி நேரங்களில் மயக்கமடைந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
பின்னர் 25ஆம் திகதி காலை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam