யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு
அம்பாறையில் காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (03.0.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி என்ற 3 பிள்ளைகளின் தாயாவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam