பச்சிளம் சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது
ஆறு மாதமும் 11 நாட்களுமே ஆன பச்சிளம் குழந்தையை அடித்துக் கொன்றதாக 21 வயதுடைய குழந்தையில் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்பொக்க - கட்டுவன கெதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குழந்தை பலனின்றி சிகிச்சை
கடந்த 30 ஆம் திகதி கழுவிக்கொண்டிருந்த போது தவறுதலாக சுவரில் தலை மோதியதாக தெரிவித்து குழந்தை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த குழந்தை பலனின்றி சிகிச்சை உயிரிழந்தது.
இதனைடுத்து மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் ஊறுபொக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகளின் போது தாயினால் கைக்குழந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam